ஏன் சுவீடனில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்படவில்லை? – பதில் உள்ளே!

ஏன் சுவீடனில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்படவில்லை? – பதில் உள்ளே!

பல நாடுகளில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமையானது அந்த நாடுகளில் கொரோனா பரவாமல் இருக்கும் என்ற நம்பிக்கையாகும். ஆயினும் சுவீடனில் மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே மூடப்பட்டு பாலர் பள்ளிகள் திறந்திருக்கின்றன.

பலர் இதை தவறாக காண்கின்றனர். ஆயினும் அரசாங்கம் அதை விரும்பவில்லை, அரசாங்கமானது பல நிபுணர்களின் அறிவுறுத்தலின் படியே நடக்கின்றன. அவர்களுக்கு பாலர் பாடசாலைகளை மூட விருப்பம் இல்லை. காரணம் அந்த நிபுணர்களின் கருத்து படி பாடசாலைகளால் இந்த கொரோனா வைரஸ்
பரவவில்லையென்பதாகும்.

ஏனெனில், வயதானவர்களை இந்த வைரஸ் தாக்குவதுபோல் குழந்தைகளையோ, சிறார்களையோ தாக்குவதில்லை. அதே நேரம் குழந்தைகளும், சிறார்களும் வீட்டில் இருந்தால் எல்லாப் பெற்றோர்களாலும் அவர்களை வீட்டில் இருந்து கவனிக்க முடியாது என்பதும் ஒரு காரணாமாக அந்த நிபுணர்கள் முன்வைப்பதால்,
அரசாங்கம் பாலர் பாடசாலைகளை இதுவரை மூடவில்லை. அத்தோடு மட்டுமல்லாது மருத்துவர்கள் செவிலியர்கள் இந்த நேரத்தில் வேலைக்கு வராமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனிக்க நேர்ந்தால், இன்னும் இந்த கொரோனா தொற்று கட்டுப் பாட்டில் இல்லமால் மிக மோசமடையும் என்பதும் பெரும் அச்சமாகவே பார்க்கப்படுகின்றது.

பாடசாலைகளை மூடுவது என்பது பெரிய விடயம். நாம் சுவீடனையும் ஏனைய நாடுகளையும் ஒப்பிடுவதை
நிறுத்தவேண்டும் என Farshid Jalalvand கூறுகின்றார். அவர் Lund பல்கலைக்கழகத்தில் நோய்களை ஆராச்சி செய்யும் ஆராச்சியாளர். அவர் மேலும் கூறுகையில், சில நாடுகளில் வேறு வழியில்லை, அவர்களின் உடல்நல பாதுகாப்புத்துறை பெருமளவில் இயங்க முடியாத சூழலுக்குள் தள்ளப்படடதனால், அவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடினமாயிற்று, ஆகவே பள்ளிகளை மூடுவதால் ஓரளவுக்கு மக்கள் வீட்டில் இருக்க நேரிடும் அதனால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று அந்த நாடுகள் நம்புகின்றன.

சுவீடனில் இன்னும் அந்த நிலைமை வரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

COMMENTS