Unicef – Pure Earth அபாய அறிவிப்பு!

Unicef – Pure Earth அபாய அறிவிப்பு!

“உலகின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளின், இரத்தத்தில் வழமைக்கு அதிகமான அளவில் ஈயம் காணப்படுகிறது!”. ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனிசெஃப்’ (Unicef), ‘தூய பூமி’ (Pure Earth) ஆகிய இரு சர்வதேச நிறுவனங்களும் இணைந்து இந்த அபாய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. அதாவது இதுவரை      80 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 100 கனசதம இலீற்றர்(cl) இரத்தத்தில் ஈயத்தின் அளவு 0,005 மில்லி கிராமிற்கு (5 மைக்ரோகிராம்) இற்கு மேற்படும்போது குழந்தைகளின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்படும். குறிப்பாக மூளையில் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத அளவில் பாதிப்புகள் ஏற்படலாம்.

மின்கலங்களில் உள்ள ஈயம் பூமியில் சேர்ந்து நஞ்சூட்டப்படுவதே இந்தப் பிரச்சனைக்கான மிக முக்கிய காரணமாகும். சரியான முறையில் மின்கலங்களில் உள்ள ஈயம் அகற்றப்படாவிடில் அது பூமியில் சேர்ந்து நீண்ட காலம்வரை இருக்கும். மக்களிடையே இந்த ஆபத்து சம்பந்தமான அறிவின்மையும், வறுமையான மற்றும் முன்னேறும் நாடுகளில் இயங்கும் வெளிநாட்டு சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயற்படுவதும், அவர்களின் கவனக்குறையுமே இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

ஆக்கம்: மோகன்

நன்றி: SVT Nyheter

 

COMMENTS