மூன்று புதிய மருத்துவமனை தயார் நிலையில்! – சுவீடன்

மூன்று புதிய மருத்துவமனை தயார் நிலையில்! – சுவீடன்Foto: Jonas Ekströmer / TT

நிபுணர்களின் கருத்துப்படி மேலும் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் எனவும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய 3 மருத்துவமனைகள் பின்வரும் இடங்களில் தயார் நிலையில் உள்ளன. அவை, Stockholm, Göteborg மற்றும் Helsingborg ஆகும்.

ஆயினும், அவை மூன்றும் உண்மையான மருத்துவமனைகள் அல்ல, அவை கூடாரங்கள் போன்று உள்ளவை, மருத்துவ உபகரணங்கள், நோயாளர்களை கவனிக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டவை. அவை அனைத்தும் இராணுவ உதவி கொண்டு செய்யப்படடவை.

ஹெல்சிங்கிபோர்க் மற்றும் ஸ்கொனே போன்ற இடங்களில் 20 கூடாரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவபர்கள், சிகிச்சை அளிக்கப்படுவர்.

ஸ்டோக்ஹோல்ம்மிலும் அத்தகைய கூடாரங்கள் வார இறுதியில் பாவனைக்கு வரவுள்ளன. ஆரம்பமாக 140 நோயாளர்களுக்கு மாத்திரம் இடம் உள்ளது, ஆயினும் மேலும் 600 பேருக்கு இடம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS