திரைவிழுந்த வெண்ணிலா – பாடல்!

திரைவிழுந்த வெண்ணிலா – பாடல்!

Lyrics By Kaviyazhan (கவியாழன்)

feat. Prathadsan & Ishwaria

Music by: Vernon G Segaram (வேர்ணன்)

—————————————————-

திரைவிழுந்த வெண்ணிலா

நீ எனக்காக தானே

உயிர் கொண்டு தீண்டவா..

உன் உறவாகத் தானே

தேன் நிலவில் தேவதையோ..

உன் மூச்சோடு நான் சேரவா..

உயிர் கூடும் இரவிலே..

நீ எனை ஆழத்தானே

உடல் கொண்ட மோகமே

உன் அணைப்போடு தானே..

விரல் தீண்ட இமை மூடுதே

உன் விருப்போடு இடம் மாறுதே…(திரை விழுந்த….)

சரணம் 1:

பெண்: காதல் மெதுவாக கரைகின்றது..

            காற்றை உனக்காக தருகின்றது

            மாற்றம் உயிரோடு நிகழ்கின்றது..

            மனதில்  மகிழ்வாகி தொடர்கின்றதே….

ஆண்: பனியில்  இரவோடு படர்ந்திடும் போது

           பகல் எது முடிவெது அறிந்திடுமோ

           நானென்பதேநீயென்பது….

           நாளொன்று போதாதே..நாம் என்றிட…(திரை விழுந்த…)

சரணாம் 2:

ஆண்: மோகம் ஏதேதோ செய்கின்றது

          மௌனம் கலையாமல் வெல்கின்றது

          மீதம் எதுவென்று நகர்கின்றது

          மூச்சில் சரசங்கள் தொடர்கின்றதே

பெண்:  உனது நெஞ்சோடு விழுந்திடும் போது ..

            நான் எது நாமெது தெளிந்திடுமோ..

            வாழ்வென்பதேநாளென்பது

            நீயின்றிப் போகாதே..நான் என்றிட….(திரை விழுந்த..)

(Visited 5 times, 1 visits today)

COMMENTS