ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஆறு பேருடன் ஒரு கார் சுண்ட்ஸ்வாலுக்கு வெளியே ஒரு சிறிய சாலையில் இருந்து ஓடிக்கொண்டிருந்தது. திடீரென வீதியை விட்டு விலகி காட்டுப்பகுதினுள்ளே மோதி அந்த கார் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் இறந்துவிட்ட்னர்.
இறந்த நான்கு பெரும் 16 வயது இளைஞர்கள். விசாரணையை மேற்கொண்டுள்ள போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில், கனமான இதயத்தோடு தான் 16 வயது சிறுவர்கள் நான்கு பேர் இறந்துவிட்டார்கள் என்பதை என்னால் தெரிவிக்க முடியும் எனவும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது ஒரு மிகப்பெரிய சோகம் எனவும் உள்ளூர் பொலிஸ் பகுதித் தலைவர் ஜோசப் விக்லண்ட் மிகுந்த வருத்தத்துடன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் இரண்டு பேர் மருத்துவமனைகளில் பலத்த காயங்களுடன் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
COMMENTS