இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிரம்பிவிட இருக்கும் ஸ்டோக்ஹோல்ம் (Stockholm) மருத்துவமனை இடங்கள் – கொரோனா தொற்று தீவிரம்!

இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிரம்பிவிட இருக்கும் ஸ்டோக்ஹோல்ம் (Stockholm) மருத்துவமனை இடங்கள் – கொரோனா தொற்று தீவிரம்!

ஸ்டோக்ஹோல்ம் நகரில் மருத்துவமனைகள் எல்லாம் இன்னும் ஒரு வார காலத்துக்குள் கொரோனா தொற்று கொண்டவர்களால் நிரம்பிவிடும், என ஸ்டோக்ஹோல்ம் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்த புதிய உள் ஆவணங்கள் (Internal Documents) உறுதி படுத்துகின்றன. அதே நேரம் இதை சமாளிக்க ஸ்டோக்ஹோல்ம் பிராந்திய சுகாதார நிலையங்கள் (Health Centers) தயாராகி வருகின்றன.

அத்தோடு மட்டுமல்லாது, ஆரம்ப சுகாதார மைய (läkare från primärvården) மருத்துவர்கள் விரைவாக தம்மை
தயார் படுத்திகொண்டு தம் வீட்டில் உள்ள கொரோனா தொற்றுள்ளவர்களை கவனிக்கவேண்டிய நிலையே உருவாகும் எனவும் அந்த ஆவணம் கூறுகின்றது.

இது தவிர, ஸ்டோக்ஹோல்மில் உள்ள மருத்துவமனைகள் எல்லாம் தற்போது தொற்று நோயின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய இருப்பதாக, ஸ்டோக்ஹோல்ம் பிராந்தியத்தில் முன்னர் அறியப்படாத ஆவணம் ஒன்று கூறுகின்றது.

மார்ச் 27 தேதியிட்ட ஆவணத்தில், இனியும் தொடர்ந்து நோயாளிகளை ஆரம்ப பராமரிப்பில் அதே வழியில் ஒதுக்கி வைப்பது சாத்தியமில்லை என்றும் அவர்களை தொற்று நோய்ப்பிரிவில் தான் சேர்க்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. காரணம் மொத்த கொரோனா நோயாளிகளில் 10 விகிதமானோர்க்கு மருத்துவமனை தேவைப் படுகின்றது. இந்த நிலைமை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும்.

இதே நேரம் மருத்துவமனை இடங்கள் மட்டுப்படுத்தப் பட்டவை, ஆகவே ஸ்டோக்ஹோல்ம் பிராந்தியத்தில் அதன் தேவை கருதி ஒதுக்கப்பட்ட இடங்கள், அவசர சிகிச்சைப் பிரிவு இடங்கள் எல்லாம் நிரம்பிவிட இருக்கின்றன.

ஆவணத்தில் கூறப்பட்டதுபோல் மருத்துவமனை இடங்கள், வரும் ஏப்ரல் 7ம் தேதி நிரம்பிவிடும். அதோடு மட்டுமல்லாது எதிர்வரும் ஏப்ரல் 29ம் தேதி எல்லா இடங்களும் நிரம்பி அதிகபட்ச சுகாதார தேவை (Healthcare Peak) என்ற நெருக்கடி நிலைமையில் தள்ளப்படும் என அந்த ஆவணம் மேற்கோள் காட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுவீடன் வாழ் மக்களின் ஒத்துழைப்பில் மாத்திரமே இனிவரும் காலங்கள் எவ்வாறு அமையும் என்பது தெளிவாகும்.
இயன்ற வரை வீட்டில் இருந்து, அரசாங்கம் முன்வைக்கும் அறிவுரைகளை பின்பற்றி வந்தால் இந்த நிலைமையில் சில மாற்றம் நேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

COMMENTS