ஸ்டோக்ஹோல்ம் (Stockholm) நகரில் கொரோனா பாதிப்பு தீவிரம்!

ஸ்டோக்ஹோல்ம் (Stockholm) நகரில் கொரோனா பாதிப்பு தீவிரம்!

ஸ்டோக்ஹோல்ம்மில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும்
அத்தோடு பரவும் விகிதம் தீவிரம் அடைந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டோக்ஹோல்மில் மாத்திரம் 300 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் ஆள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதிக ஊழியர்கள் தேவையென மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்தோடு மருத்துவமனை உபகரணங்களும் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் தலைமை தாங்கும் Björn Eriksson
அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை 42 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்துவிட்டனர்.

(Visited 4 times, 1 visits today)

COMMENTS