ஸ்டோக்ஹோல்ம் மத்திய நகரத்தில் தீ விபத்து! – சுவீடன்

ஸ்டோக்ஹோல்ம் மத்திய நகரத்தில் தீ விபத்து! – சுவீடன்Photo : NILS PETTER NILSSON

இன்று காலை ஸ்டோக்ஹோல்ம் மத்திய நகரத்தில் அமைந்துள்ள ஒரு சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காற்றில் பரவும் அபாய நிலை காணப்பட்டதாகவும் பின்னர் இன்று 11 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர் அலெக்சாண்டர் கூறுகையில், சொத்துக்கள்  சேதமாகியுள்ளதாகவும் அதே நேரம் தனிப்பட்ட காய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது தீ விபத்து ஏற்பட்ட கன்வெர்க்கர்காட்டான் (Hantverkargatan) அருகே உள்ள விதிகள் சில மூடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 4 times, 1 visits today)

COMMENTS