ஈஸ்டர் விடுமுறைக்கு வீட்டில் இருக்கவும்! – சுவீடன்

ஈஸ்டர் விடுமுறைக்கு வீட்டில் இருக்கவும்! – சுவீடன்

விரைவில் ஈஸ்டர் விடுமுறை வரவிருப்பதால், மக்கள் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதை விரும்பவில்லை.

மக்கள் விடுமுறைக்கு செல்லும் போது கொரோனா தொற்று அதிகரிக்கும் அதேநேரம் விடுமுறையில் இருக்கும்போது அவர்கள் மருத்துவ உதவி பெறுவதும் கடினம். ஆகவே அவர்கள் விடுமுறையில் செல்லாது வீட்டிலேயே இருப்பது நல்லது என Taha Alexandersson (myndigheten Socialstyrelsen) கூறுகின்றார்.

தற்போதுவரை சுவீடனில் 4028 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் இறந்துவிட்டனர், இன்று மட்டும் 36 பேர் மரணம். நிலைமை கடுமையாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈஸ்டர் விடுமுறையில் மக்கள் செல்ல நினைப்பது மிக ஆபத்தானது.

இனிவரும் வாரங்கள் மிகக் கவனமாக மக்கள் நடந்து கொள்ளவேண்டும் இயன்ற வரை உறவினர்களை சந்திப்பதை தவிர்ப்பது நன்று. சமூக தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும் நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதும் மிக ஆபத்தானது.

இத்தாலி கடைப்பிடிக்க தவறியதை சுவீடன் வாழ் மக்களும் அதேயே செய்தால். எதிர்வரும் மாதம் இன்னும் கடுமையான நிலைமையில் சுவீடன் இருக்க நேரிடும்.

COMMENTS