கொரோனாவுக்கு பலியான 4 மாத பச்சிளம் குழந்தை!

கொரோனாவுக்கு பலியான 4 மாத பச்சிளம் குழந்தை!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 6430 யை கடந்துள்ளது. குஜராத்தில் 2624 பேரும், டெல்லியில் 2376க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பாதிப்பு 1964யை நெருங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் 1699 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம், 6-வது இடத்துக்கு சென்றுள்ளது. இதேபோல் முதல் 10 இடங்கள் பட்டியலில் இருந்து கேரளா வெளியேறியுள்ளது. கேரளாவில் தற்போது வரை 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 316 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாத பச்சிளம் குழந்தை இன்று காலை உயிரிழந்தது. இதய நோய் பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட குழந்தைக்கு, இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

COMMENTS