ஸ்டோக்ஹோல்ம்: களவுடன் கூடிய கத்திக்குத்து விபரீதம்!

ஸ்டோக்ஹோல்ம்: களவுடன் கூடிய கத்திக்குத்து விபரீதம்!photo : just stockolm

இன்று காலை ஸ்டோக்ஹோல்ம் சேடெர்மாளம் பகுதியில் உள்ள வீட்டுத்தொகுதியில் களவுடன் கூடிய கத்திக்குத்து நடைபெற்றுள்ளது. ஒரு நபர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்ததாகவும் மேலும் அவரது வீட்டில் இருந்து ஒருவர் ஓடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைத்தொலைபேசி, பணம் ஆகியன களவு போயுள்ளதாகவும் இது ஒரு கொலைக்கான முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக ஸ்டோக்ஹோல்ம் பிராந்திய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியை உள்ளடக்கிய இடங்கள் முடக்கப்பட்டு விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)

COMMENTS