சுவீடன் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் கஃபேக்களுக்கான புதிய விதிமுறை! – நகராட்சி (Kommun)

சுவீடன் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் கஃபேக்களுக்கான புதிய விதிமுறை! – நகராட்சி (Kommun)

சுவீடனில் உள்ள உணவகங்கள் (Restauranger), மதுக்கூடங்கள் (Barer) மற்றும் கஃபேக்கள்
அனைத்தும் புதிய விதிமுறையை பின்பற்றவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்
பாதிப்புக்காரணமாக இந்த புதிய விதிமுறை பின்பற்றப்படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதவாது, உணவகங்களில் மக்கள் நிற்கக்கூடாது மாறாக அவர்களுக்கான இருக்கையும்
மேசையும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும் அத்தோடு மட்டுமல்லாமல் ஒரு மேசைக்கும்
இன்னொரு மேசைக்குமான இடைவெளி அதிகமாக இருக்கவேண்டும். கூட்டமாக உணவருந்துதல் தவிர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக உணர முடிகின்றது.

இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறும் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் கஃபேக்கள் முற்றாக மூட
நிர்பந்திக்க படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை சம்மந்தப்பட்ட நகராட்சிகள் (Kommun) உறுதி செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

COMMENTS