சுவீடனில் 50 பேருக்கு மேல் கூடி நின்றால் தடை – புதிய விதிமுறைகள்

சுவீடனில் 50 பேருக்கு மேல் கூடி நின்றால் தடை – புதிய விதிமுறைகள்

தற்போது சுவீடனில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள்:

சுவீடனில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்
பிரதமர் Stefan Löfven அவர்கள் கூறியுள்ள புதிய விதிமுறைகள் வரும்
ஞாயிறு (நாளை) முதல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைப்பிடிக்கப் படவேண்டிய விதிமுறைகள்/சட்ட்ங்கள் பின்வருமாறு:

  • வருத்தம் உள்ளவர்கள் வீட்டில் இருக்கவேண்டும், கடும் அல்லது சிறு (தடிமன், சாதாரண காய்ச்சல்) வருத்தமாக இருந்தாலும் சரி அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
  • 70 வயதிற்கு மேற்படடவர்கள் வேறு யாரையும் சந்திக்க கூடாது.
  • வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவேண்டும்.
  • மக்கள் தேவையில்லாமல் பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடாது.
  • 50 பேருக்கு மேல் மக்கள் ஒன்றுகூடக் கூடாது.
  • உணவகங்களில் மக்கள் இருந்து சாப்பிட வேண்டும், நின்றோ அல்லது கூட்டமாக இருந்தோ
    சாப்பிடக்கூடாது.

இதுவரை சுவீடனில் 106 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில் மேலும் இந்த எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்ற அம்சமான சூழலில், இந்த விதிமுறைகளை மிகக் கடுமையாக
பின்பற்றவும்.

COMMENTS