சுவீடனில் கொரோனா தொற்றைக் மட்டுப்படுத்த உதவும் ஒரு கைத்தொலைபேசி மென்பொருள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த மென்பொருளானது சுவீடன் லுண்ட் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மென்பொருளின் பெயர் “COVID Symptom Tracker” ஆகும். அதுமட்டுமன்றி இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தரையிறக்கம் செய்து பாவிக்க முடியும் என்பது கூடுதல் தகவலாகும். மேலும் , இந்த மென்பொருளானது பிரித்தானியாவில் அமெரிக்காவிலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நீங்களும் உங்கள் கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொரோனா பரவுவதை தடுக்க உதவுங்கள்.
COMMENTS