நகராட்சிகளுக்கு (Kommun) 15 பில்லியன் – சுவீடன்

நகராட்சிகளுக்கு (Kommun) 15 பில்லியன் – சுவீடன்

சுவீடனில் உள்ள நகராட்சிகளுக்கு 15 பில்லியன் அரசு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் 5 பில்லியன் அரசு வழங்கியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நகராட்சிகள் நிதி தட்டுப்பாட்டில் இருக்கின்றன, அதை சரி செய்யவே இந்த மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் மக்கள் வேலைக்கு செல்வதன் அளவு குறைந்துவருவதால் நகராட்சிகள் குறைந்தளவு வருமானவரிகளையே ஈட்டமுடியும், இதனால் பெரும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுவருவதாக அறியப்படுகின்றது. இதையெல்லாம் சரி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டுமெனில் இவ்வாறான திட்டங்கள் மிக அவசியமாகும், என நிதி அமைச்சர் Emil Källström அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார பாதுகாப்புத் துறைக்கு 2 பில்லியன் நிதி அறிவிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

COMMENTS