நீங்கள் வேலைக்கு செல்லமுடியாமல் உடல் நலக்குறைவால் விடுப்பில் இருக்கும் முதல் நாள் (Karensdag) பற்றிய முக்கிய செய்தி! – சுவீடன்!

நீங்கள் வேலைக்கு செல்லமுடியாமல் உடல் நலக்குறைவால் விடுப்பில் இருக்கும் முதல் நாள் (Karensdag) பற்றிய முக்கிய செய்தி! – சுவீடன்!Photo: Försäkringskassan

கடந்த மார்ச்.11ம் திகதியில் இருந்து வரும் மே.31ம் (2020) திகதி வரை Karensdag ஆனது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டில் இருக்கும் முதல் நாளுக்கு, அரசாங்கப் பணம் Försäkringskassan இல் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்தச் சட்டத்தின் நோக்கமானது, காய்ச்சல், தடிமன் போன்ற வருத்தம் வரும்போது, தற்போதைய சூழ்நிலையில் மக்களை வீட்டில் இருக்கவைக்க உதவும் என்பதாகும். ஆகவே நீங்களும் இந்தச் சட்டத்தை பின்பற்றி கொள்ளவும்.

குறிப்பு:

நீங்கள் தொடர்ந்து உடல் நலக்குறைவாக இருக்கும்போது, 8வது நாளில் இருந்து சமர்ப்பிக்கும் மருத்துவ சான்றிழை, தற்போது 15வது நாளில் இருந்து சமர்ப்பித்தால் போதுமானது, என அரசாங்கம் அறிவித்துள்ளது.

COMMENTS