தற்போது: பிறந்து 6 வாரமே ஆன குழந்தை கொரோனா தொற்றால் மரணம்!

தற்போது: பிறந்து 6 வாரமே ஆன குழந்தை கொரோனா தொற்றால் மரணம்!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிறந்து ஆறே வாரம் கடந்த குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோதும், சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளது. இந்த குழந்தையே இதுவரை கொரோனா தொற்றினால் இறந்த மிகக் குறைந்த வயதுடையவர்.

தன்னை வல்லரசு என்று அறிவித்துக்கொள்ளும் நாடான அமெரிக்கா, தொற்று நோயின் பாதிப்பில் இருந்து வெளிவர தவித்துக்கொண்டிருக்கும் போது இந்த குழந்தையின் இழப்பு பெரும் வேதனைக்குரியதாகவே உள்ளது.

இந்த செய்தியானது அமெரிக்காவின் NBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

COMMENTS