யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கிய இருவர் இன்று வீடு திரும்புகின்றனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கிய இருவர் இன்று வீடு திரும்புகின்றனர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த போது, கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரியாலை தேவாலயத்தில் மார்ச் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்ற மானிப்பாயைச் சேர்ந்த போதகர், சுவிஸ் போதகரின் சாரதி மற்றும் அரியாலை , மானிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தலுக்கு உட்டுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அவர்கள் 6 பேரும் வெலிகந்தை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் இருவரே முழுமையாகக் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்காக வீட்டிலேயே தங்கியிருப்பார்கள் என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

COMMENTS