கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையில் விசாரணை!

கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையில் விசாரணை!photo: Karolinska

கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையில் (Huddinge) கடந்தவாரம் கொரோனா தொற்றுக்கு ஆளான செவிலியர் ஒருவர் மரணமடைந்தார், அது தொடர்பாக பணி சுற்றுச்சூழல் சட்டம் மீறப்பட்டதா என்ற கோணத்தில் ஒரு விசாரணையை மேற்கொள்ள போலீசாரும் வழக்கறிஞர்களும் தொடங்கியுள்ளனர். மேலும், விசாரணையை நடத்தி அது தொடர்பாக எழுத்துப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பொலீசாரிடம் வழக்கறிஞர் ஜென்னி நோர்டின் கூறியுள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரதிநிதிகள் செவிலியரின் மரணத்தை பொலீசில் புகார் செய்ததாகவும், மேலும் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் பொது சுகாதார முகமை தரத்திற்கு ஏற்ப இருக்கவில்லையென்று குற்றம் சுமத்தியதாகவும் அறியப்படுகின்றது.

இது தொடர்பாக சுவீடன் நியூஸ்வயர் (Newswire TT) பத்திரிக்கை நிறுவனம் மருத்துவமனையை அணுகியபோது, மருத்துவமனை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக TT பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

 

COMMENTS