இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவும் வேகம், அதிர வைக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது.  செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மட்டும் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 240 பேருக்கு 15 மணி நேரங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த கால அளவில், இவ்வளவு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அதுமட்டுமல்ல கடந்த 24 ஆம் தேதி 562 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, அடுத்த 5 நாட்களில் அதாவது மார்ச் 29 ஆம் தேதி ஆயிரத்தைக் கடந்தது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் அடுத்த 3 நாட்களில் மட்டும் 626 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 40 விழுக்காடு ஆகும்.

செவ்வாய்க்கிழமை வரை 133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 38 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மாநிலவாரியான பட்டியலில் அதிகளவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. கேரளாவில் பாதிப்பு 240ஐ கடந்துள்ளது. தமிழகம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையில் அடுத்த இடங்களில் உள்ளன. தெலங்கானா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது.

வரும் நாட்களில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என பரிசோதனை அதிகரிக்கும் போது இந்த எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

COMMENTS