பள்ளியில் கடும் தீ – ஸ்டோக்ஹோல்ம் (Stockholm – Bredäng)

பள்ளியில் கடும் தீ – ஸ்டோக்ஹோல்ம் (Stockholm – Bredäng)

தெற்கு ஸ்டாக்ஹோமில் ப்ரெடாங்கில் உள்ள ஸ்லட்கார்ட்ஸ்கோலனில் உள்ள ஜிம்னாசியம் மண்டபம் (Gymnastikhallen på Slättgårdsskolan) முழுமையாக எரிந்து கொண்டிருக்கிறது. ஸ்டாக்ஹோம் தீயணைப்பு பாதுகாப்பு நிர்வாக மேலாளர் டோபியாஸ் எக்சன் கூறுகையில், “நாங்கள் இப்போது 14 தீயணைப்பு வண்டிகளை அனுப்பியுள்ளோம், ஆயினும் தீயானது கடுமையாக பற்றி எரிகிறது.

இன்று 21:56 இற்கு எமக்கு அபாய அறிவிப்பு பாடசாலையில் இருந்து வந்தது. நாம் தொடர்ந்து தீயை அணைப்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம் ஆனாலும் தீ பற்றிய மண்டபம் பிரிந்து அருகில் உள்ள இடங்களை பாதிக்காதவாறு அவதானமாக செய்யவேண்டியுள்ளதால். நாம் தொடர்ந்து 24 மணிநேரமும் முயன்று தீயை அணைக்க போராடிக்கொண்டு இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு இதுவரை காயம் அடைந்தவர்கள் தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

(Visited 5 times, 1 visits today)

COMMENTS