கோதன்பர்க்கில் (Gothenburg) தீ விபத்து – சுவீடன்!

கோதன்பர்க்கில் (Gothenburg) தீ விபத்து – சுவீடன்!Photo: Robert Nilsson

கோதன்பர்க்கில் உள்ள ஹிசிங்கனில் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்துக்குள்ளானவை மொத்தவியாபார நிலையமும், அத்தோடு சேர்ந்த பல லாரிகள் என்று மீட்பு சேவையின் பத்திரிகை சேவை தெரிவித்துள்ளது.

லாரிகள் ஒன்றுக்கொன்று அருகிலும், ஒரு கட்டிடத்தின் அருகிலும் நிறுத்தப்பட்டன. பல டயர்கள் மற்றும் பிரஷர் டாங்கிகள் வெடித்தன, ஆனால் பெரிய வெடிப்பு ஏற்படும் அபாயம் இல்லை என்று மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் ஜோஹன் கார்ல்சன் கூறுகிறார்.

தற்போது, 18 அலகுகள் மற்றும் சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பணிபுரிகின்றனர். தனிப்பட்ட காயம் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

புகை கொஞ்சம் குறைந்துவிட்டது, ஆனால் நீங்கள் அருகில் வசிப்பவர்களாயின் உங்கள் வீட்டு ஜன்னல்களை மூட வேண்டும்.

புகை வடகிழக்கில் பரவுகிறது ஆகையினால் அங்கிருக்கும் எக்ஸ்போர்ட்காட்டான் (Exportgatan) வீதி மூடப்பட்டுள்ளது.

COMMENTS