இத்தாலிக்கு உதவ மருத்துவக் குழு: பிரிட்டன் கப்பலுக்கு இடம் – உலகுக்கு முன்னுதாரணமாக கியூபா

இத்தாலிக்கு உதவ மருத்துவக் குழு: பிரிட்டன் கப்பலுக்கு இடம் – உலகுக்கு முன்னுதாரணமாக கியூபா

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இத்தாலிக்கு 52 பேர் அடங்கிய மருத்துவக் குழுவை கியூபா அரசு அனுப்பியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகஅதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. சீனாவின் ஊஹான் நகரில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்திவருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், இத்தாலி கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,500-யைக் கடந்துள்ளது. இந்தநிலையில், இத்தாலிக்கு உதவும் வகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 52 பேர் அடங்கிய மருத்துவக் குழுவை கியூபா அரசு இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த கியூபா மருத்துவக் குழுவை அனுப்புவது ஆறாவது நாடு இத்தாலியாகும். இதற்கு முன்னதாக, வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரிநேம், கிரிநடா ஆகிய நாடுகளுக்கும் அனுப்பியுள்ளது.

முன்னதாக, 1,000 பேருடன் கரீபியன் பகுதியில் பயணித்து வந்த ப்ரீமர் சொகுசுக் கப்பலில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 40 பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் ப்ரீமர் சொகுசுக் கப்பலை தங்களது துறைமுகத்தில் நிறுத்த எந்தவொரு நாடும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஹவானா அருகேயுள்ள துறைமுகத்தில் ப்ரீமர் கப்பலை நிறுத்த க்யூபா முன்வந்தது. கியூபாவில் இருந்து பயணிகளை விமானம் மூலம் லண்டனுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து தங்களது நாட்டின் சொகுசுக்கப்பலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்த கியூபாவுக்கு பிரிட்டன் நன்றி தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த பயணிகளும் கியூபாவுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

COMMENTS