கொரோனா – கடலட்டை இரத்தம் – புதியமருத்துவம்!!

கொரோனா – கடலட்டை இரத்தம் – புதியமருத்துவம்!!

கடலட்டையின் (VER MARIN) இரத்தம் கொரோனா நோயாளிகளிற்கான புதிய மருந்தாகப் பாவிக்கப்பட உள்ளது.

கொரோனா நோயின் தீவிரத்தால், சுவாசச் சிக்கல் ஏற்பட்டு, ஒக்சிஜனின் அளவு பெருமளவு குறைவதால் சாவு ஏற்படுகின்றது. இதற்கு ஏற்ற புதிய மருந்தாகவே கடலட்டையின் இரத்தம் உபயோகப்படுத்தப்பட உள்ளது.

மனிதனின் இரத்தத்தில் உள்ள  ஹேமோகுளோபின் (hémoglobine)உருவாக்கும் ஒக்சிஜனின் அளவை விட நாற்பது மடங்கு ஒக்சிஜனை கடலட்டையின் இரத்தத்தில் உள்ள  ஹேமோகுளோபின் உருவாக்குவதாக அறியப்பட்டுள்ளது. மனித உடலில் இந்த இரத்தம் ஏற்றப்பட்டுத் துல்லியமான பெறுபேறுகளும், சுவாசம் சீரானமையும் உறுதிப்படுத்பட்டுள்ளது.

இந்தச் சிகிச்சை முறையை, பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான நிறுவனமான ANSM (Agence nationale du médicament et des produits de santé) மற்றும் தனிமனிதப் பாதுகாப்பிற்கான ஆணையமான CPP (Comité de protection des personnes) ஆகியவை அங்கீகரித்துள்ளன.

COMMENTS