கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான செவிலியர் மரணம்! – சுவீடன்

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான செவிலியர் மரணம்! – சுவீடன்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வீட்டிலேயே தங்கி இருந்த கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனை பணியாளர் திடீரென மரணமடைந்துள்ளார் என கரோலின்ஸ்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த நபர் செவிலியராக சிறப்பாக பணியாற்றியவர் என்றும் சில வாரங்களுக்கு முன்னர் உடல்நிலை மாற்றம் உணர்ந்ததாகவும் ஆகையால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு மரணம் அடைந்த செவிலியர் சில நாட்களுக்கு முன்னர் தனது முகப்புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார் என்று முதல் செய்தியாக Aftonbladet செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“எனக்கும் (40 வயது) எனது சக பணியாளர்கள் பலருக்கும் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவே, கொரோனா பரிசோதனை செய்துள்ளோம் எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள், முடிவு நெகடிவ் (Negative) ஆக வரவேண்டும் என்று” என அவர் பதிவிட்டுள்ளார்.

COMMENTS