கடந்த சில தினங்களாக பிரித்தானியர்கள் நடந்து கொள்ளும் விதம் விசித்திரமாக உள்ளது.
பிரதமர் போரிஸ் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர்கள் திரும்பவும் கேளிக்கைகளிலும்
ஊர் சுற்றுவதிலும் அதிக நாட்டம் காட்டுவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
அதிலும் எம்மவர்களை சொல்லவே வேண்டாம். கடைகளை திறந்து வைத்து காத்திருப்பதையும் காண முடிகின்றது.
ஒரு நாட்டின் சட்டத்தை மதிக்க தெரியவேண்டும் வெறும் முட்டாள்கள் போல பார்க்கிலும், கடற்கரையிலும்
பொழுதை கழிக்க புறப்பட்டுவிட்டனர்.
இவர்களுக்கு கொரோனா வந்தால் தான் என்ன என்று எண்ணத்தோன்றினாலும் ஒன்றும் அறியாத மற்றவர்களும் அல்லவா
இவர்களால் பாதிப்படைவார்கள். அது தெரிந்தும் இப்படி அஜாக்கிரதையாக நடந்து கொள்வது பேரிழப்பை கொண்டுவந்து சேர்க்குமே தவிர வேறென்ன வந்து சேரும். வேதனையோடு பலர் கருத்துக்களை உள்வாங்கி இந்த கட்டுரை பிரதிபலிக்கின்றது.
கொரோனாவை உங்கள் ஒற்றுமை கொண்டு கடக்கமுடியாது….உங்கள் வேற்றுமை அதவாது கூட்டமாக இல்லமால் இயன்றவரை
தனித்தே நாட்களை கடந்து செல்லுங்கள். நன்மை பயக்கும்.
ஆதவப்பிரியன்
பிரித்தானியா!
COMMENTS