பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று – உறுதிசெய்யப்பட்டது!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று – உறுதிசெய்யப்பட்டது!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதுடன், நாட்டின் முக்கிய தலைவர்களை தாக்கி வருகிறது என்றே கூறலாம்.

சில தினங்களுக்கு முன்னர் இளவரசர் சார்லஸிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நான் சிறிய அளவிலான அறிகுறிகளை கண்டதன் காரணமாக, சோதனை மேற்கொண்டேன். அதில் தனக்கு நேர்மறையான முடிவு வந்துள்ளதால், தன்னைத் தானே தனிமைப்படுத்துக் கொண்டேன்.

இதனால் எதுவும் நிற்காது, அரசை முன் நின்று வழி நடத்துவேன், வைரஸை எதிர்த்து போராடுவதற்கான அனைத்தையும் நான் செய்வேன்.

இவை அனைத்தும் நான் வீடியோ கான்பிரன்ஸ் கால் மூலம் செய்வேன், என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

COMMENTS