நாளை முதல் வயதானவர்களை பார்க்கத் தடை – சுவீடன்

வயதானவர்களை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.

நாளை முதல் வயதானவர்களை பார்க்கத் தடை – சுவீடன்Photo: AA

குறிப்பாக வயதானவர்களை கொரோனா வைரஸ் இலகுவாக தாக்குவதால், நாளை முதல் சுவீடனில் வயதானவர்களை
ஏனையவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்களை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. அதே நேரம் வைத்தியசாலைகளில் வயதானவர்களை கையாள்வதிலும் பெரும் சிரமும் உள்ளது. ஆகவே தற்போதைய நிலைமையில் வயதானவர் பெரும் எண்ணிக்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலை வருவதை மட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக இந்த விதிமுறை நாளைமுதல் அமுலுக்கு வரும் என்று பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் கூறுகின்றார். இன்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதை அறிவித்தார்.

மேலும், விரைவில் ஈஸ்டர் விடுமுறை வரவிருப்பதால் மக்களை வெளியே செல்லவேண்டாம் என்றும், வழமையாக ஈஸ்டர் காலத்தில்
குழந்தைகள் அயலவர்களுக்கு இனிப்பு வழங்குவதும், வாங்குவதும் இம்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

COMMENTS