5ஜி (5G) தொழில்நுட்பம்

5ஜி (5G) தொழில்நுட்பம்

அனைவரும் அறிந்ததைப்போலவே 5G இல் இணையவேகம் பலமடங்கு அதிகரிக்கும் . நாம் தற்போது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடுகளில் பயன்படுத்துகின்ற அதிவேக பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு வேகத்துடன் செயல்படும் .

இந்தியாவில் தற்போது 4G இணைய வேகம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4G சேவையை வழங்குகின்றன. .

அடுத்தகட்டமாக 5G சேவையினை இந்தியாவில் கொண்டுவர சோதனைகள் தொடங்கப்போகின்றன . ஆம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவிக்கையில் “தொலைதொடர்பு அமைச்சகம் சென்னை IIT இல் தொடங்கவிருக்கும் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் “என்றார் .

இந்த சோதனை இந்திய தொலைதொடர்பில் மைல்கல்லாக இருக்கப்போவதுடன் , தொலைதொடர்பு நிறுவனங்கள் 5G க்கு மாறுவதற்கும் உதவி மற்றும் அறிவுரைகளை வழங்கும் .

5ஜி சேவையினை வழங்குவதன் மூலமாக இந்திய அரசிற்கு அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக $27 மில்லியன் கிடைக்கும் .

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கப்பட்டுவிடும் என கூறலாம் . இதற்கு முன்னர் இந்திய மக்கள் 2G, 3G , 4G போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்திருக்கின்றனர் . அவை ஒவ்வொண்டிற்கும்  சாதாரண மக்களாகிய நாம் அறிந்திருப்பது என்னவோ இணைய வேகம் ஒவ்வொரு தலைமுறை தொழில்நுட்பத்திலும் அதிகரித்திருக்கிறது என்பது தான் .
தற்போது ஐந்தாம் தலைமுறை தகவல்தொழில்நுட்பம் வந்ததும் இணைய வேகம் மட்டும் கூடப்போகிறது என நினைத்துக்கொள்ளவேண்டாம் . கட்டற்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்த 5G ன் மூலமாக நாம் பெறப்போகிறோம். சரி அப்படி என்ன இந்த 5G யால் வந்துவிடப்போகிறது என பார்க்கலாம். வாருங்கள்

அனைவரும் அறிந்ததைப்போலவே 5G இல் இணையவேகம் பலமடங்கு அதிகரிக்கும் . நாம் தற்போது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடுகளில் பயன்படுத்துகின்ற அதிவேக பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு வேகத்துடன் செயல்படும் .

Browsing Speed : 56 Mbps to 490 Mbps
Download Speed: 8 Mbps to 100 Mbps
(Visited 1 times, 1 visits today)

COMMENTS