30 நிமிடத்திற்கு ஒருமுறை புதைக்கப்படும் சடலங்கள்: இத்தாலியில் சிக்கிய பிரித்தானியரின் திகில் வாக்குமூலம்

30 நிமிடத்திற்கு ஒருமுறை புதைக்கப்படும் சடலங்கள்: இத்தாலியில் சிக்கிய பிரித்தானியரின் திகில் வாக்குமூலம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரித்தானிய நர்ஸ் ஒருவர் வெளியிட்ட தகவல், அங்குள்ள கொடூரமான சூழலை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

இத்தாலியில் கொரோனா பாதித்த நோயாளிகளை வெறும் எண்களாக மட்டுமே கருதுவதாகவும், மருத்துவமனைகளில் புதிதாக நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் பிரித்தானியரான Connor McAinsh தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் பெர்காமோ பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவரும் Connor McAinsh, கொரோனா பாதித்த நோயாளிகளின் வருகை நள்ளிரவிலும் குறைந்தபாடில்லை என்கிறார்.

ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததும், அடுத்த சில நிமிடங்களில் அவரது படுக்கையை இன்னொருவருக்கு வழங்கப்படுகிறது என்கிறார் Connor McAinsh.

மேலும், இத்தாலியில் தாம் பணியாற்றும் பகுதியில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சடலங்கள் புதைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி தற்போது கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியுள்ளது.

நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையிலும், கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3,405 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை என்பது 3,248 மட்டுமே.

இத்தாலி மருத்துவமனைகளில் தற்போது நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்பது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் எந்த நோயாளிகளிடமும் அக்கறையுடன் எவரும் சிகிச்சை அளிப்பது குறைந்துள்ளதாகவும் Connor McAinsh தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய மருத்துவர்கள் தங்கள் நாட்டு கொரோனா நோயாளிகளை அக்கறையுடன் கவனிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாலி இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொள்ள கண்டிப்பாக தயாராக இருக்கவில்லை என்று கூறும் அவர், அதனாலையே தற்போது திணறி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் Connor McAinsh.

COMMENTS