22 வயதுடைய ‘அமீன்’ என்பவர் கொரோனா தொற்றின் காரணமாக மரணம்! – சுவீடன்

22 வயதுடைய ‘அமீன்’ என்பவர் கொரோனா தொற்றின் காரணமாக மரணம்! – சுவீடன்Photo: Private / Aftonbladet

தென் ஸ்டோக்ஹோல்ம் பகுதியைச் சேர்ந்த ‘அமீன்'(22) என்பவர் கொரோனா தொற்றின் காரணமாக இன்று மரணமடைந்தார். ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் தடிமன் (Common cold)  என நினைத்து மருத்துவமனைக்கு செல்ல மறுத்து வந்ததாகவும், பின்னர் நிலைமை மோசமடைந்து வந்த காரணத்தால் அவசர சிகிச்சைப்  பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மேலும், திடீரெண்டு அவருக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படவே குடும்பத்தினர் அவசர சிகிச்சைப்  பிரிவை நாடியதாகவும், அதன் பின்னர் சொல்னா கரோலின்ஸ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்ட பின்னரும் அவர் குடும்பத்தினருடன் அடிக்கடி வீடியோஅழைப்பில் நாளாந்தம் பேசிவந்துள்ளார். ஆயினும் அவரின் உடல் நிலை நேற்று முன்தினம் மிகக் கடினமான நிலமைக்குள் சென்றதன் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.

அமீனின் சகோதரி கூறுகையில், அமீனிற்கு எந்தவித வேறு வருத்தங்களோ இருக்கவில்லை என்றும் தனது உடல் நலத்தில் அவர் மிகுந்த அக்கறையுள்ளவர் என்றும் கூறியுள்ளார்.

சுவீடனில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி  இறந்தவர்களில் அமீன் வயதுகுறைந்தவர் என்பது இங்கு அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

(Visited 14 times, 1 visits today)

COMMENTS