விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை – பிரபல இயக்குநர் விளக்கம்

விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை – பிரபல இயக்குநர் விளக்கம்

விஜய்யின் 65-வது படத்தை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து விளக்கமளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் நடிக்கும் 65-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதையடுத்து பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், சுதா கொங்கரா, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜய் ஞானமுத்து உள்ளிட்டோரின் பெயர்கள் தளபதி 65 படத்துக்கான இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றன.

இந்நிலையில் அஜய் ஞானமுத்துவிடம் தளபதி 65 படத்தை நீங்கள் இயக்குவது உண்மையா என்று கேள்வி எழுப்ப, “இல்லை. இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

COMMENTS