பூக்கள் பூப்பதெல்லாம் தமக்காகவே
என்று பெண்களின் கூந்தல்கள் நினைக்க
பூக்கும் பூக்களெல்லாம் தனக்காகவே
என்று புன்னகைக்கும் பூக்காரக் கிழவி
பூக்கள் மாலையானது தமக்காகவே
என்று அரசியல்வாதிகள் அகமகிழ
பூத்ததெல்லாம் மொத்தம் தனக்கே
காசாகுமோ? கலங்கும் தோட்டக்காரன்
வெய்யிலில் இதழ் வாடி முகம் சோர்ந்து
நீர் தேடி நெடும் பயணம் வேரோடி
பார்த்து நிற்பது பூக்கள் இனவிருத்திக்காய்
பறந்து வரும் பட்டாம் பூச்சிக்கே
-மோகன்
2012-04-01
COMMENTS