நீ என் மகன் அல்ல, என் தந்தை!

நீ என் மகன் அல்ல, என் தந்தை!

✍  கவிதை என்பது உணர்ச்சிப்பெருக்கின் வடிகால்.
தந்தை – மகன் உறவு என்பது மகத்தான பிணைப்பு.
இந்தப் பிணைப்பு சொந்தத்தின் ஆணிவேர்.

இவற்றையெல்லாம் பிரதிபலிக்கும் அற்புதமான ஒரு கவிதை இது.

இவன் விழிகள்…
இவன் பார்வைகள்..
இவன் மொழிகள்..
இவன் குறும்புகள்..
இவன் குதூகலங்கள்…
இவன் காட்டும்….அனைத்துமே என் உயிர்வரை சென்று வருடும்…
ஆயிரம் கவிதைகள் எனக்குள் தோன்றி மறையும்….ஆயினும்
இவன் பாசம் அதை மழுங்கடிக்கும்….

கவியே கவியெழுத மறந்த தருணம் தந்த என் மகனே….
உன் அரவணைப்பு என்னை திக்குமுக்காடச்செய்யும்…
உன் கண்களும் சிரிக்கும்…என் கவலைகள் பறக்கும்…
என் கோபமும் தவிடுபொடியாகும்….உனக்காய்….
கொஞ்சம் பொறுமையும் கற்றுக்கொண்டேன்…
உன்னால்…உறவின் மறுபக்கம் உணர்ந்தேன்…
நீ என் மகன் அல்ல…. என் தந்தை….

உனது கண்களுக்கு நானும் எனது கண்களுக்கு நீயும்…
தந்தையும் மகனுமான…மகனும் தந்தையுமான…
மகத்துவம்….என் மனம் பலமுறை உணர்ந்ததடா…
என் செல்வமே….என் அனைத்துமே நீயடா…
பல கோடி முத்தங்களுடன்…

எழுதியவர்: ‘கவியாழன்’
2020-06-24

COMMENTS