நீயே துறவி!

நீயே துறவி!

நீயே துறவி!

ஆருடம் சொல்லும் பாடம் அல்ல வாழ்க்கை
ஆன்மாவின் அணு அணுவான ஆசைகளே வாழ்க்கை
அல்லல் படும் நேரம் மட்டுமா?
ஆசை செல்லும் பாதை மட்டுமா?
நேரமும் பாதையுமே வாழ்க்கையின் கூறுகள்..
பயணம் நாம் தீர்மானிப்பதல்ல..

திசைகள் எட்டுத் தெரிந்தாலும்..
இறைவன் தீர்ப்பு என்றும் தெரியாது..
தீர்ப்பை எண்ணி கலங்காதே..
கவலை தீர்க்கும் மருந்து என்ன? கண்டுபிடி..

அன்புக்கு பூட்டு போடாதே..
போட்டாலும் சாவி உன்கையில் இருக்குமா?
உணர்வுகள்தான் சாவி..
உணர்விற்கு பூட்டுப்போட முடிந்தால்!
சாவியை தொலைத்து விடு…ஏனெனில்!
நீயே துறவி…நீயே துறவி..

-கவியாழன்-

COMMENTS