கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு பாதிக்கிறது..? வியந்துபோன விஞ்ஞானிகள்..!

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு பாதிக்கிறது..? வியந்துபோன விஞ்ஞானிகள்..!

நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து நடத்திய ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு மூலமாகவே தடுப்பூசி எவ்வாறு தயாரிப்பது என்கிற யோசனை பிறந்திருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் இந்த நோய் எதிர்ப்பு சக்திகள் வலுவிழக்கும் செயலும், கொரோனா வைரஸ் அதைத் தாக்கும் செயல்களும் வியக்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மெல்போர்ன் ஆய்வுக் குழுவினர் இணைந்து 47 வயது கொண்ட பெண்ணின் இரத்த மாதிரியைப் பயன்படுத்தி நான்கு வெவ்வேறு காலநிலையில் பரிசோதனைச் செய்துள்ளனர். அவர் ஆஸ்திலேலியாவில் கோவிட் 19 வைரஸ் தாக்கிய முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

11 நாட்கள் நோயால் பாதித்த அவருக்கு வைரஸ் தாக்கும்முன் புகைத்தல், மது என எந்த பழக்கமும் இன்றி ஆரோக்கியமாக
இருந்துள்ளார். அவருக்கு எந்த நோயும் கிடையாது.மருத்துவமனையில் வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டதும் 11 நாட்கள் அவருக்கு எந்தவித ஆண்டி பயாடிக் மருந்தோ, மாத்திரைகளோ அளிக்கப்படவில்லை. முற்றிலும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். காரணம் மருத்துவர்கள் அவருடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் இந்த வைரஸ்  அழியுமா என பரிசோதிக்கவே உணவின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளனர்.

11 நாட்கள் கடக்கும்போது அவருடைய உடல் நிலை தேறி வருவதை உணர முடிந்துள்ளது. பின் அவருடைய இரத்த மாதிரிகளை மீண்டும் பரிசோதித்ததில் அவருடைய நோய் எதிர்ப்புச் சக்தி வழக்கத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

சில கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் காப்பாற்றபட்ட  நிலையில் சிலர் ஏன் இறந்தார்கள் என்பது இந்த ஆய்வின் மூலமே கண்டறியப்பட்டது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காரணம், இறந்தவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிகக் குறைவாக இருந்துள்ளது. அதோடு வைரஸ் தாக்கத்திற்கு முன்பே அவர்களுடைய உடல் ஆரோக்கியமும் பலவீனமாக இருந்துள்ளது.

எனவே உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களை இந்த கொரோனா வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை  அதிகரித்தாலே குணமாவார்கள் என்று இந்த ஆய்வின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

COMMENTS