கொரோனா அறிகுறி உறுதியானதும் சிரித்தேன்!’- பாதிப்பிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் பதிவு

கொரோனா அறிகுறி உறுதியானதும் சிரித்தேன்!’- பாதிப்பிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் பதிவு

வாஷிங்டனில், சியாட்டில் என்ற மிகப்பெரிய நகரம் உள்ளது. அமெரிக்காவின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதியில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கையும் இப்பகுதியில்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் எலிசபெத் ஷ்னெய்டர் என்பவர் வசித்து வருகிறார். 37 வயதான இவர் பயோ இன்ஜினீயரிங் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த வைரஸ் குறித்து அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நோயுற்றிருந்தபோது ஏற்பட்ட தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

எலிசபெத் கடந்த பிப்ரவரி மாதம் விருந்து ஒன்றுக்குச் சென்று திரும்பியுள்ளார். அங்குதான் இந்தக் கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார். ஆனால், விருந்தில் யாருக்கும் தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விருந்தில் கலந்துகொண்ட 40 சதவிகிதம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பின் நாள்களில் அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனைத்து மனிதர்களையும் தவிர்ப்பதைத் தவிர இந்தக் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்பது அவருடைய கருத்து.

தன் உடலில் ஆரம்பகட்ட அறிகுறிகள் குறித்து அவர் பேசும்போது, “ஒருநாள் காலையில் நான் கண் விழித்தபோது சோர்வாக உணர்ந்தேன். வழக்கமாக வேலைக்குச் செல்லும்போது இந்த மாதிரியான சோர்வு ஏற்படுவது சாதாரண விஷயம்தான் என்று நம்பினேன். இருப்பினும், மதிய வேளையில் காய்ச்சல், உடல் மற்றும் தலை வலியை அதிகமாக உணர்ந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றேன். அன்றைய இரவு எனக்கு 103 டிகிரி உடல் வெப்பநிலை இருந்தது. கடுமையான குளிர் எனக்கு இருந்தது. காய்ச்சல் மருந்துகளை எடுத்துக்கொண்டேன். ஒருவேளை உடல்நிலை தீவிரமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நண்பர் ஒருவரையும் அழைத்திருந்தேன். ஆனால், உடல் வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது” என்று கூறியுள்ளார்.

COMMENTS