கொரோனாவால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த பங்குச்சந்தை!

கொரோனாவால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், கடந்த ஒரு மாதமாக பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த மாதம் 20ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன.

இன்றைய காலை நிலவரப்படி, பங்குச்சந்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 2 ,000 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1, 814 புள்ளிகள் குறைந்து 27 ஆயிரத்து 55இல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.


இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 524 புள்ளிகள் குறைந்து 7 ஆயிரத்து 944 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

COMMENTS