கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! – நேற்றும் 152 பேர் பலி!

கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! – நேற்றும் 152 பேர் பலி!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

கனடாவில் இதுவரை, 50,026 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளாகிய 2,859 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். மேலும் 19,190 பேர் குணமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும், 1526 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. அதேவேளை, நேற்று 152 பேர் உயிரிழந்துள்ளனர். இது நேற்று முன்தினம் ஏற்பட்ட உயிரிழப்பை விட 5 கூடுதலாகும்.

COMMENTS