ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-ல் நடக்க வாய்ப்பு!

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-ல் நடக்க வாய்ப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி போட்டிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி போட்டிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறவிருந்த போட்டிகளுக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதனை அடுத்த ஆண்டு உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

போட்டிகள் தள்ளிப் போவதால் டிக்கெட்களை உபயோகப்படுத்த விரும்பாதவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

COMMENTS