ஊரடங்குச் சட்டத்தை மீறிய 20 பேர் அதிரடிக் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 20 பேர் அதிரடிக் கைது

புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் ஊரடங்குச் சட்ட அமுலில் இருந்தவேளை அதனை மீறிச் செயற்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில் நாட்டின் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை மீறுவோரைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் மேற்படி 20 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த ஊரடங்குல் சட்டம் அமுலில் இருக்கு்ம நேரத்தில் கடலில் மீன்பிடிக்க்ச சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

COMMENTS