உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா? ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செஞ்சிடுங்க – ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு

உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா? ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செஞ்சிடுங்க – ஆஸ்திரேலிய ஆய்வுக் குழு

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். ஆனால், கூகிளுக்கு பிறகு உலகை பெருமளவு தன் கைக்குள் வைத்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு சறுக்குகிறது. கூகிள் வீடியோ, சமூக செயலி, காலிங் செயலி என தனித்தனியாக மக்களை கூறுப்போட்டு தன்னுள் வைத்திருக்கிறது எனில், ஃபேஸ்புக் நிறுவனமோ வாட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமை வாங்கி வெறும் மூன்றே செயலிகளில் ஒட்டு மொத்த கூகிளுக்கும் வலுவான சவால் அளித்து வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த ஒரு மாத காலாமாக கடும் பின்னடைவை மற்றும் பயனாளிகள் மத்தியில் மிகுந்த அவப்பெயர் பெற்று வருகிறது ஃபேஸ்புக்/ மார்க் சூக்கர்பர்கும் தன்னால் முடிந்த வரை மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால், இந்த முறை அவர் மன்னிப்புக் கேட்டாலும் எந்த பயனும் பெற முடியாது. அப்படி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது குயின்ஸ்லாந்து பல்கலைகழகம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.

குயின்ஸ்லாந்து!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் அமைந்திருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, மன அழுத்தம் அற்ற வாழ்க்கை பெற என்ன செய்ய வேண்டும் என்ற ஆய்வொன்றை துவக்கியது. இந்த ஆய்வின் முடிவில் ஃபேஸ்புக் கணக்கிற்கு மூடுவிழா நடத்திவிட்டால் போதும், மன அழுத்தமற்ற வாழ்க்கை பெற்றுவிடலாம் என்ற தகவல் கிடைக்க்துள்ளது. இது மக்களுக்கு சந்தோசமாக இருக்கலாம், ஆனால், மார்க் சூகர்பார்க்கிற்கு கவலையாக இருக்கும்.

அனாலிடிகாவிற்கு

பிறகு காம்ப்ரிட்ஜ் அனாலிடிகா ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி விற்றதன் செய்தி வெளியான பிறகு ஃபேஸ்புக் தலையில் பெரும் இடியாக விழுந்துள்ளது இந்த ஆய்வு தகவல். இந்த ஆய்வானது பேராசிரியர் எரிக் வன்மென் என்பவரால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இவர் குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் சைக்காலஜி துறை சீனியர் லெக்சரராக பணியாற்றி வருகிறார்.

ஹார்மோன்!

இந்த ஆய்வின் போது எரிக் வன்மென் ஃபேஸ்புக்கில் இருந்து வெளிவரும் போது உடலில் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் கார்டிசோல் எனும் சுரப்பி குறைந்துவிடுகிறது என்று கண்டறிந்தார். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் எச்சிலை சாம்பிளாக எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு குழுவாக பிரிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு, மற்றவர்களை ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்த கூறினார்கள்.

ஐந்து நாட்கள்!

ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் அனைவரிடம் இருந்து எச்சில் சாம்பிளாக பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ஜர்னல் ஆப் சோசியல் சைக்காலஜியில் வெளியான இந்த ஆய்வறிக்கையில், ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்தாமல் தடை செய்யப்பட்ட நபர்கின் எச்சிலை பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களது உடலில் கார்டிசோல் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் சுரப்பியின் அளவு குறைந்திருப்பது தெரியவந்தது.

தாக்கங்கள்!

வெறும் ஐந்தே நாட்கள் ஃபேஸ்புக்கில் இருந்து விலகி இருந்ததற்கே கார்டிசோல் சுரப்பி அளவு உடலில் குறைந்துள்ளது. இது ஸ்ட்ரெஸ் அதிகரிக்க செய்வது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது, நினைவாற்றலை குறைக்கிறது மேலும் உடல் பருடம் அதிகரிக்க காரணாமாக இருக்கிறது. அதே போல, ஃபேஸ்புக்கில் இருந்து நீங்கள் விலகி இருக்கும் ஆரம்பக் காலக்கட்டத்தில் உங்களை சோகமாக உணர செய்யும் என்றும். அதை தாக்குப்பிடித்துவிட்டால் நீங்கள் மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழ வகிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மனோ ரீதியாக மட்டும்!

இந்த ஆய்வை நடத்திய எரிக் வன்மென், இது மனோ ரீதியான அழுத்தத்தை மட்டுமே குறைக்கும் என்றும், இது மன ரீதியாக புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது. ஸ்ரெஸ் லெவல் குறைவது மட்டுமின்றி, இந்த ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை தவிர்த்த நபர்கள் தாங்கள் உணர்வு ரீதியாக மேலோங்கப்பட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளனர். இதனால், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்நாப் சாட் , ட்விட்டர் போன்ற சமூக செயலிகள், தளங்கள் மனிதர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிக்க மட்டுமே பயன்படுகிறது என்று எரிக் வன்மென் நடத்திய இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உறவுகளும் கூட…

ஃபேஸ்புக் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது இப்போது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம், மன அழுத்தம் என்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி உறவுகளின் ஆரோக்கியத்தையும் ஒரு கை பார்க்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மன அழுத்தம் காரணமாக ஏற்படும் மனோரீதியான சமநிலை இழப்பு உறவுகளுக்குள் தேவையில்லாத சண்டைகளை, விரிசலை ஏற்படுத்தவும் செய்கிறது. அதாகப்பட்டது ஃபேஸ்புக் ஆரோக்கியத்தை மட்டுமல்ல உறவுகளையும் கொல்கிறது.

COMMENTS