தேடுக...

 

Share

ஹேர் கலரிங் வந்ததும் கருப்பான கூந்தல் மோகம் காணாமல் போனது. இயல்பாக கருகரு கூந்தல் உள்ளவர்கள் கூட, அதை செம்பட்டையாகவும்  டார்க் பிரவுன் நிறத்திலும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 

கலரிங் பண்ணிக்கலாம்தான்.... ஆனா ஏற்கனவே முடி ரொம்ப கொட்டுதே' என்றோ  இருக்கிறதே எலிவால் கூந்தல் அதுல கலரிங் வேறயா? என்று கவலை படுகிறவர்களில் நீங்களும் ஒருவரா?

உங்களுக்காகவே இந்த குட் நீயூஸ்! ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படுகிற கூந்தல் சிகிச்சை ... உங்கள் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.  அழகுத்துறையில் இப்போது ரொம்ப ரொம்ப லேட்டஸ்டான கலரிங் குறித்துப் பேசுகிறார் அழகு கலை நிபுணர் மேனகா.

கலரிங் பத்திப் பேசறதுக்கு முன்னாடி ஹேர் எக்ஸ்டென்ஷனோட பலன்களைப் பார்த்துடலாம். இன்னிக்கு கூந்தலை பராமரிக்க யாருக்கும் நேர  அவகாசமோ பொருமையோ இருக்குறதில்லை. எத்தனையோ காரணங்களால் எல்லாருக்கும் முடி கொட்டுது. கல்யாணம் நிச்சயமாகிறப்பதான், முடி  இல்லையேங்கிற கவலை தலைதூக்குது. கல்யாணத்துக்கு ஹேர்ஸ்டைல் பண்ண முடியுமா, புகுந்த வீட்ல என்ன சொல்வாங்களோனு ஏகப்பட்ட  குழப்பம், இது பெண்களுக்கு மட்டுமில்லாம ஆண்களுக்கும் இருக்கு.

சின்ன வயசாக இருக்கும். ஆனா முடியே இல்லாத மண்டையால ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப்போறிருக்கும். கல்யாணம் தள்ளி போகும்.  இவங்களுக்கெல்லாம் வரப்பிரசாதமா வந்திருக்கிற சிகிச்சைதான் ஹேர் எக்ஸ்டென்ஷன். விக், சவுரி முடி, உபயோகிக்கிறதுல உள்ள நடைமுறை  சிக்கல் இதுல கிடையாது. ஏற்கனவே உள்ள முடியோட, செயற்கை முடியை தச்சு விடறது. ஒட்டி விடறது. கிளிப் டைப்ல ஃபிக்ஸ் பண்றதுனு இதுல  நிறைய வகைகள் இருக்கு.

அவங்கவங்க தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏத்தபடி எதை வேணாலும் தேர்ந்தெடுக்கலாம். பார்லர்ல வந்து ஹேர் எக்ஸ்டென்ஷன் பண்ணிக்கிட்டா  அப்புறம் அதோடவே நீங்க தினசரி வேலைகளைப் பார்க்கலாம். நீச்சல் அடிக்கலாம் விளையாடலாம். ஏன் நீங்களா சொன்னாலொழிய யாருக்கும் அது  செயற்கை முடிங்கிற விஷயம் தெரியாது. இழுத்தா வராது. திடீர்னு கழண்டு விழுந்துருமோங்கிற பயம் வேண்டாம். சுத்தமாக பராமரித்தால் மட்டும்  போதும் என்கிற மேனகா கலரிங் பற்றி தொடர்கிறார்..

இதோ ஹேர் எக்ஸ்டென்ஷன் முறையில் பண்றது தான் இந்த லேட்டஸ்ட் கலரிங்கும். ஒரிஜினல் முடியில் கலரிங் பண்ண வேண்டாம்னு  நினைக்கிறவங்களுக்கும், பார்ட்டி கிரிக்கெட் மேட்ச் மாதிரி ஒரு நாள் கூத்துக்கு கலரிங் பண்ண நினைக்கிறவங்களுக்குமானது ஹேர் எக்ஸ்டென்ஷன்.  டிரெஸ்சுக்கு மேட்ச்சா கிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள், காப்பர், வயலட், பிளான்ட், கோல்ட்னு எல்லா கலரும் இருக்கு.

கல்யாணப்பெண்கள் மத்தியில் இதுக்கு மவுசு அதிகம். ஸ்ரெயிட்டனிங் பண்ணின மாதிரி சுருள், சுருளா அலை அலையா எப்படி வேணாலும்  பண்ணிக்கலாம் என்கிற மேனகா கூந்தலுக்கான இந்த செயற்கை அட்டாச்மெண்ட்டுகள் செய்வதில் இல்லத்தரசிகளுக்குப் பயிற்சி தரவும் தயாராக  இருக்கிறாராம்.        

 

No Fire Zone! Apps

"இலங்கையின் கொலைக்களம்" iOS மற்றும் Android மென்பொருள் தரையிறக்கம் செய்யலாம்!Admin

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

Who's Online

We have 269 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On