தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

உலக கோப்பை போட்டியின் 26வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும், பிஞ்ச்சும் களமிறங்கினர்.

3வது ஓவரிலேயே பிஞ்சை அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தார் ஆப்கன் வீரர் தவ்லத் சட்ரன்.

2வது விக்கெட்டுக்கு ஸ்மித் களமிறங்கினார். அவரும், வார்னரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்களை எடுத்தது. வார்னரும் 40 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாடியதால் 25 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுக்கப்பட்டன.

வார்னரும் தனது சதத்தை பூர்த்தி செய்தார். 29வது ஓவரில் ஸ்மித்தும் பவுண்டரி அடித்து 50 ரன்களை தொட்டார். 30வது ஓவரில் வார்னர் விஸ்வரூபம் எடுத்தார். தவ்லத் சட்ரன் வீசிய அந்த ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் அடித்து அசத்திய வார்னர், 32வது ஓவரில் மீண்டும் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 33வது ஓவரில் 150 ரன்களை கடந்தார்.

தொடர்ச்சியாக பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசிய அவர் 38வது ஓவரில் 178 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து ஆபத்தான ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அவரது பேட்டில் பட்ட பல பந்துகள் எல்லை கோட்டை நோக்கி பறந்தபடி இருந்தன. 40வது ஓவரில் சிக்சர், பவுண்டரி, 41வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், 43வது ஓவரில் 1 சிக்சர் என பந்துகளை பறக்கடித்தார் மேக்ஸ்வெல். எனினும் 43வது ஓவரின் 5வது பந்தில் ஸ்மித் 95 ரன்களுக்கு அவுட்டானார்.

44வது ஒவரில் 21 பந்துகளை மட்டுமே சந்தித்த மேக்ஸ்வெல் 50 ரன்களை பூர்த்தி செய்தார். இந்நிலையில் 46வது ஓவரை வீசிய ஹமீத் ஹசன் அற்புதமான யார்க்கர் மூலம் பால்க்னரை க்ளீன் போல்டாக்கினார். 48வது ஓவரில் சூரத்தனம் காட்டிய மேக்ஸ்வெல்லும் 88 ரன்னில்(39 பந்துகள்) அவுட்டானார்.

50 ஒவரின் கடைசி பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்களை குவித்தது. உலக கோப்பை போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு 418 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஆப்கன் அணி பேட்டிங் செய்து வருகிறது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 84 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On