தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி சேகரிக்க, சேனல் 4 தொலைக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள்

கொல்லப்பட்டனர். அப்போது அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து இலங்கையின் மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போரின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், செய்தி தொடர்பாளர் இசைப்பிரியா ஆகியோர் கொல்லப்பட்ட காட்சிகளை, இங்கிலாந்தின் சேனல் 4 டிவி ஒளிபரப்பியது.

இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் உலுக்கியது. இந்நிலையில், இலங்கையில் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் செய்தி சேகரிக்க டிவி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சேனல் 4 டிவிக்கு இலங்கை தடை செய்திருந்ததால், காமன்வெல்த் மாநாட்டில் செய்தி சேகரிக்க அதற்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து இலங்கை தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லா கூறுகையில், சேனல் 4 டிவி பொய் தகவல்களை ஒளிபரப்பியதன் மூலம் இலங்கை மீது தவறான எண்ணம் ஏற்பட வழி ஏற்பட்டுள்ளது. எனினும், காமன்வெல்த் மாநாட்டை படம் பிடிக்க அனுமதிப்பதன் மூலம் அந்த தொலைக்காட்சி தனது எண்ணங்களை சரி செய்து கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சேனல் 4க்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, அங்குள்ள சிங்கள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் சேனல் 4 ஊழியர்கள் வரும் தகவலை அறிந்து கொழும்பு விமான நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 114 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On