தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப்

பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை என்பது வெளிப்படடை என்று ரொரன்ரோ ஸ்ரார் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரோசி டி மென்னோ எழுதியுள்ள இலங்கை பற்றிய கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கண்ணீர்த்துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே இலங்கை. இங்கு இடம்பெற்ற போரின் போது விழுந்த கண்ணீர்த்துளிகள் எண்ணுக்கணக்கற்றவை. அதே போன்று போரின் போது உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையும் அளவற்றது. இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது அதில் அகப்பட்டுத் தவித்த மக்களைப் பாதுகாக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபை, போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது 40,000 தொடக்கம் 70,000 வரையான பொது மக்கள் போரில் படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. 2006 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின ரால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்ட போரில் தமிழ்மக்கள் கொல்லப்படுவதை தடுக்க இலங்கை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி இலங்கை அரச படைகள் போரின் போது மிகக் கொடூரமான மீறல்களைப் புரிந்தன. போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் எனப் பல்வேறு மீறல்களை அந்தப் படைகள் மேற்கொண்டன.

செறிவான எறிகணை வீச்சுக்கள், அப்பாவி மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள், மனிதாபிமான தொடரணிகள் மீதான தாக்குதல்கள் என எவ்வித பாகுபாடுமின்றி இலங்கை படைகள் தாக்குதல்களை மேற்கொண்டன.

போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 'நம்பகமான' விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவிப்பிள்ளை அறிவித்திருந்தார்.

அத்துடன் இலங்கை அரசு உரிய முறையில் விசாரணையை மேற்கொள்ள முன்வராவிட்டால் அனைத்துலக சமூகமானது தனது சொந்த விசாரணைப் பொறி முறைகளை உருவாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் எனவும் நவிப்பிள்ளை அறிவித்திருந்தார்.

1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது.

ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குஉரியது என அந்த ஊடகம் தனது பந்தியில் தெரிவித்துள்ளது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 279 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On