தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக... இசைப்பிரியா வீழ்ந்துகிடக்கும் காட்சி துடிதுடிக்க வைக்கிறது. இன விடுதலைக்காக கள முனையில் கால் பதித்து நின்ற ஒரு பெண் போராளி, அவமானகரமான முறையில்

கொல்லப்பட்டிருக்கிறார். எதிரியின் கரங்களில் உயிருடன் பிடிபட்டு, அணு அணுவாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்களை எண்ணிப்பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது. இன விடுதலைக்காக இறுதிவரை யுத்தக்களத்தில் நின்ற ஓர் இளம் போராளிக்கு, அந்தக் கணம் எத்தனை பயங்கரமானதாக இருந்திருக்கும்? சாகும்போது அந்தப் பெண்ணுக்கு வயது 27. எத்தனை எத்தனை கனவுகள் இருந்திருக்கும்... இளமைத் துள்ளல் உற்சாகத்துடன் பட்டாம்பூச்சியாகச் சுற்றித் திரியவேண்டிய பருவம். விரும்பி அதைத் துறந்தவர் இசைப்பிரியா.

இன விடுதலையில் தன் பங்காக ஊடகம் வழியே புகுந்தார். இளையோர் மத்தியில் விருப்பத்துக்குரிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இறுதியில் நந்திக் கடலோரத்தில், கொத்துக் குண்டுகளின் பின்னணி ஒலியில், எதிரிகளின் கரங்களில் சிக்கிச் சிதைக்கப்பட்டார். இது இசைப்பிரியாவுக்கு மட்டும் நேர்ந்த கதி அல்ல, லட்சம் விடுதலைப் போராளிகளின் காணொளி சாட்சி அவர். 'நிராயுதபாணிகளைத் தாக்கக் கூடாது' என்கிறது போர் விதி. அதை நசுக்கி மிதித்துவிட்டுத்தான் இலங்கையின் ஹிட்லராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் ராஜபக்ச. இதற்கு இசைப்பிரியா இன்னொரு சாட்சி.

ஆனால், இதுவே முதல் சாட்சி அல்ல, இறுதிச் சாட்சியும் அல்ல. இனிமேலும் இப்படியான மனம் கனக்க வைக்கும் சாட்சிகள் வரலாம், வரும். இத்தகைய சாட்சிகள் ஏதுமற்றவர்களின் இரக்கத்தைக் கோரி கண்ணீரை வரவைப்பதால், எந்தப் பலனும் இல்லை. மாறாக, அதிகாரத்தில் உள்ளோரின் மனசாட்சியை அறைய வேண்டும். ஆனால், இப்போதும் இரக்கமற்று உறைந்து போயிருக்கும் கொடுங்கோல் கொடுமையை என்னவென்று சொல்ல!

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 148 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On