தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்நாட்டு விசாரணை விடயத்தில்,தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்று இலங்கை வந்துள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரை சந்தித்து பல விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

இலங்கை அரசாங்கம் நீண்டகால இழுபறிக்குள்ளாகியிருக்கும் காணி, தடுத்து வைத்தல், காணாமற்போதல் மற்றும் பொதுமக்கள் வாழ் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் ஆகிய பிரச்சினைகளுக்கு மிக குறுகிய காலத்திற்குள் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சிவிலியன்கள் வாழும் இடங்களில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் அழுத்தம் வழங்கினார்.

'ஐக்கிய நாடுகள் சபையானது தனது உறுப்பு நாடுகளால் முன்னெடுக்கப்படும் சர்வதேச தரத்தினாலான உள்ளக விசாரணைக்கு நிச்சயமாக ஆதரவு வழங்கும். எனவே, அந்த வகையில், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையும் சர்வதேச தரம், சர்வதேசத்திலுள்ள வழக்கங்கள், மனித உரிமை சாசனங்கள், ஐ.நா.வின் ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றியதொரு பொறிமுறையாக அமையும் பட்சத்தில் அதனை நம்பகத்தன்மையுடையதாக ஏற்றுக்கொள்ளும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களும் இதனை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளலாமெனவும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கத்திற்கு நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு காலஅவகாசம் தேவையென்பதனாலேயே இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஏற்று இலங்கை தொடர்பில் முன்வைக்கவிருந்த அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. எதிர்பார்ப்பு கூடிய இந்த விடயம் எத்தனை சிக்கலானது என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியும். அரசாங்கம் தான் விரும்பிய கால எல்லையை வரையறையாக கொண்டு செயற்பட முடியும்.

எனினும், இப்போது முதல் செப்டெம்பர் மாத அமர்வு வரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்கம் வெளிப்படையாக எத்தகைய பொறிமுறையை கையாண்டுள்ளது என்பதனை அவர்கள் எதிர்வரும் அமர்வில் வெளிப்படுத்தும் விதம் அரசாங்கத்தின் ஆர்வம் மற்றும் முயற்சியை எமக்கு தெரியப்படுத்துமென நம்புகின்றோமெனவும் அவர் கூறினார்.

குறுகிய காலமென்னும் போது, செப்டெம்பர் மாதத்திற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இருக்க வேண்டும். இதுவே, புதிய அரசாங்கம் தமது செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு வழங்கிய செய்தியாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 198 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On