தேடுக...

சமையல் குறிப்புகள்

திண்டுக்கல் சிக்கன் ...

தேவையான பொருட்கள்: சீரக சம்பா அரிசி – 1 கிலோ ...

மோட்டிச்சூர் லட்டு

தேவையான பொருள்கள் :கடலை மாவு - ஒரு கப்பொடித்த ரவை ...

மாலத்தீவு கிரு போகிபா

தேவையான பொருள்கள்: மைதா மாவு - அரை கப் (60 ...

சத்து மாவு பொடி

தேவையானவை : 1. கேழ்வரகு - 250 கிராம்2. கம்பு - ...

இறால் வறுவல்

தேவையான பொருள்கள் இறால் - 1/4 கிலோ கிராம் ...

பச்சைப் பட்டாணி மசாலா

தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் ...

 

Share

ஆந்திராவில் மசூலிப்பட்டினம் அருகே ஹெலன் புயல் நேற்று கரையை கடந்தது. கனமழையால் 40 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.தாசில்தார் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். ஹெலன் புயல்

காரணமாக கடலோர ஆந்திரா பகுதிகளில் நேற்று காலை முதல்   மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், விசாகப்பட்டினம், பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இதனால், கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மற்ற பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

150 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கிழக்கு கோதாவரி மாவட்டம், பெனுமன்றா மண்டல தாசில்தார் சத்திய நாராயணா, நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, பலத்த காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.நர்சாபுரம் பகுதியில் கடல் அலைகள் சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு எழுந்தன. மேலும், கடல் தண்ணீர் 50 மீட்டர் தூரம் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால், பீமாவரம் நகரில் கடலோர பகுதியில் தென்னை, வாழை மரங்கள், மின்கம்பங்கள் பலத்த காற்றுக்கு கீழே விழுந்தன.ஹெலன் புயல் காரணமாக வரும் 48 மணி நேரத்துக்கு கடலோர ஆந்திரா பகுதியில் மழை நீடிக்கும்;கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விஜயநகரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருக்கிறது.

நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் அருகே ஹெலன் புயல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கரையை கடந்தது. நேற்று மாலை கிடைத்த தகவல்படி, 7 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதில், கிருஷ்ணா மாவட்டம் கிரிதிவென்னு மண்டலம் லட்சுமிபுரம் கிராமத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவரும், மசூலிப்பட்டினம் மண்டலம் தால்லபாளையம் கிராமத்தில் மின்கம்பம் விழுந்ததில் ஒருவரும் இறந்தனர்.கிருஷ்ணா மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில், மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்தது. இதனால், மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு, அந்த கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

அடுத்த புயலாக லெகர்?

அந்தமான் அருகே நேற்று ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது மேற்கு நோக்கி நகரும் தன்மை கொண்டதாக உள்ளது. கடல் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த குறைந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அது வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில் அந்த புயலுக்கு ‘லெகர்’ என்று பெயர் சூட்டப்படும்.அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தென் தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும். வட கிழக்கு பருவமழை காலம் டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்பதால் தொடர்ந்து மழை பெய்யும் சூழல் உருவாகி வருகிறது.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு...
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க,...
கண்களைச் சுண்டி இழுக்கும்...
நாகரீகம் என்கிற பெயரில் நாம்...
எல்லா காலங்களிலும் எல்லா...
இன்று பணப் பிரச்சினையால்...

Who's Online

We have 325 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On