தேடுக...

 

Share

கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன்

அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை.

வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்… பாலிவுட்டில் பரபரப்பு! இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர்.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம். உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர்.

ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா. ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார். ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார்.

 

Sweden Ghanesh Temple

Sweden Ghanesh Temple

 

இதர செய்திகள்

அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளுக்கு ஈடாக ஈரான்...
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான...
மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த...
ஆஸ்திரேலிய நீதிமன்றம் 153 அகதிகள் நாடு...
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது...
சேற்றில் வீழ்ந்த செங்காந்தள் மலராக......
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால்...
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா...
பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து...
கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள்...
கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் செய்தி...

Who's Online

We have 182 guests and no members online

தொடர்புகள்

  • Stockholm, Sweden
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம்மைத் தொடர்புகொள்ள / To Contact Us  மின்னஞ்சல் / Email : info@swedentamils.com or admin@swedentamils.com

Follow Us On